கனடாவில் விபத்து, இலங்கையர் மரணம்
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான குலசிங்கம் கிருபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கனடாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment