Header Ads



வயோதிபரின் சடலம் மீட்பு


வயோதிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு,  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சடலமானது நேற்றைய தினம் (25.05.2023) மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கந்தானை - வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த 84 வயதுடைய ஜா - எல பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இரு கைகளும் கட்டப்பட்டு, முகம் மற்றும் கழுத்துப் பகுதி துணியொன்றால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபரின் புதல்வி வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.