சமயங்களை அவமதித்தவரை கம்பி, எண்ணுமாறு நீதிபதி உத்தரவு
மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.
“மோடாபிமானய” என்ற நிகழ்ச்சியில் குறித்த கருத்தை வெளியிட்ட நடாஷாவுக்கு எதிராக தேரர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர் விமான நிலைய அதிகாரிகளால் ஞாயிறு அதிகாலை வேளை கைது செய்யப்பட்டு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஜயனி நடாஷா எதிரிசூரிய என்பவரைக் கைது செய்யுமாறு கொழும்பு, நாரஹேன்பிட்டிய கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
Post a Comment