பதவிக்காலம் முடிந்த பின்னும், வாகனங்களை ஒப்படைக்காத அரசியல் வாதிகள்
இதன் காரணமாக அந்த வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.
அந்த வாகனங்களை எதிர்கால பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் வகையில் பாதுகாப்பாக வைக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள், அவைத் தலைவர்கள், மாகாண சபைத் தலைவர்கள், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்கள் 225 வாகனங்களும், மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள் 340 வாகனங்களும் பயன்படுத்தியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நீக்கப்பட்ட பின்னரும் சில தலைவர்களால் பயன்படுத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான 340 வாகனங்களை தமது அமைச்சு வழங்கியதாகவும், அதற்கு மேலதிகமாக அவற்றின் திருத்தப்பணிகளையும் அமைச்சு மேற்கொண்டதாகவும் வக்கம்புர தெரிவித்தார்.
இவ்வாறான வாகனங்கள் அழிக்கப்பட்டால் அந்த சபைகளின் தலைவர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவு பணம் செலவழிக்க நேரிடும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், அந்த சபைகள் அனைத்தும் தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
Post a Comment