Header Ads



நாட்டில் இப்படியும் ஒரு சம்பவம்


தலவாக்கலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டியொன்று சிகிச்சைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்ப வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.


குறித்த  சிறுத்தை குட்டியயை காட்டில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் கண்டு பிடித்து தாய் சிறுத்தையிடம் பலமுறை குட்டியை ஒப்படைக்க முயன்றபோதிலும்,  தாய் சிறுத்தை குட்டியை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


உணவு எதுவும் கிடைக்காமல் இருந்த சிறுத்தைக் குட்டி சுகயீனம் காரணமாக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சிறுத்தைக் குட்டி மனிதர்களால் தொடப்பட்டுள்ளது என்பதை மோப்பம் பிடித்ததால் குறித்த தாய் சிறுத்தை, தனது குட்டியை நிராகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.