கிழக்கு ஆளுநர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 16ஆம் திகதி பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர், இன்று -19- திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் , இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment