Header Ads



மாணவிகளே வீதிகளில் தொந்தவா..? துணிச்சலுடன் பொலிஸாரிடம் முறையிடுங்கள்


அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.


சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர், பாலியல் சேஷ்டை புரிய முயன்றுள்ளார்..


தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.


எம்.எஸ்.எம். ஹனீபா


No comments

Powered by Blogger.