Header Ads



முனவ்வராவின் மரணத்திற்கான காரணம் வெளியானது - கொலையாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கம்பளை பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயதுடைய யுவதி பாத்திமா முனவ்வரா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அதே பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், கம்பளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமை ( 14)  பிற்பகல் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


வெள்ளிக்கிழமை மாலை (மே 12) கைது செய்யப்பட்ட அவர், பாத்திமாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவர் தனது கோரிக்கையை நிராகரித்ததால், அவர் அவளை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று பின்னர் கொலை செய்து உடலை புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.


22 வயதுடைய யுவதி , இந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறுவதை அச்சுறுத்தியதாகவும், அதன் பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர்  குடையைப் பயன்படுத்தி   மூச்சுத்திணறல் ஏற்படுத்தியதாகவும் பொலிஸாரிம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சந்தேகநபர் மேலும் தெரிவித்திருந்தார்.


பாத்திமா மூச்சுத் திணறலால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

No comments

Powered by Blogger.