Header Ads



இலங்கையர்கள் அதிர்ஷ்டம் பெற்றுள்ளனர்


இலங்கையின் வனவிலங்கு வளங்களை நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியும் என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


கிரித்தலையில் நேற்று வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தால், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்கு வளங்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும்.


உலகில் மிகச் சிலரே எமது நாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், மிகச் சிலரே எமது நாட்டின் அழகை அறிவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்கள் குளிர் காலநிலையால் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றனர், ஆனால் இலங்கை மக்கள் அத்தகைய நிலைமைகள் இல்லாமல் வாழும் அதிர்ஷ்டம் பெற்றுள்ளனர். குளிரான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஒருமுறை கூட இலங்கைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். இந்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நாட்டிற்கு பெரும் பங்களிப்புகளை பெறக்கூடிய இடமாக மாற்ற முடியும்.


உயிரைக் கருத்திற்க் கொள்ளாமல் திணைக்களத்தில் சேவையாற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 1,050 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும், இதற்கு அமெரிக்காவிடம் உதவி (USAID) பெறப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், மக்கள் தொகை பெருக்கத்தால் நிலம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சீரானதாக இருக்க வேண்டும்.


“சில காலத்திற்கு முன்னர் வன மக்களுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி இருந்தபோதிலும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். வனவிலங்கு திணைக்களம் நாட்டிற்கு பெரும் சேவையை செய்துள்ளது, மேலும் அந்த துறைக்கே தனித்துவமான உயிர்ச்சக்தி உள்ளது,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கும் கடமைகளை நிறைவேற்றும் போது ஏற்படும் விபத்துக்களுக்கும் இழப்பீடு வழங்கும் நோக்கில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.