Header Ads



இன்னொரு ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர சூழ்ச்சி


மதப் போதகரான ஜெரோம் பெர்னாண்டோ ஊடாக நாட்டில் மதங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தி இன்னொரு ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வ கட்சிகளின் போராட்டக்காரர்கள் அமைப்பு ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.


நேற்று (17.05.2023) கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 500 வருடங்களுக்கு மேலாக நான்கு பிரதான மதங்கள் இருந்தன.


சில சந்தர்ப்பங்களில் சிறிய முறுகல்கள் இடம்பெற்றிருந்தாலும் அடிப்படையில் இந்த மதங்களுக்கிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் என்பன இருந்தன.


இவ்வாறான நிலையில் இதனை குழப்பும் வகையில் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மற்றும் இஸ்லாம் உள்ளிட்ட மதங்களுக்கு ஏற்படுத்திய அகௌரவ கருத்துக்கள் தெரிந்தே செய்ததாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.