Header Ads



நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சடலமாக மீட்பு, மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை (படங்கள்)


- Ismathul Rahuman -


நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


 இன்று 31 ம் திகதி பிரதேச செயலாளரை அழைத்துச் செல்வதற்காக  நீர்கொழும்பு உடயார்தோப்பு, மென்டிஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது  உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வாகத்தில் சாரதி வந்து வெளியே காத்திருந்துள்ளார். 


பிரதேச செயலாளர் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிப்பதில்லை என சாரதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கதவுகள் திறந்த நிலையில் இருந்தும், பிரதேச செயலாளர்  நீண்ட நேரமாக வெளியே வராததினால் சாரதி உள்ளே சென்று பார்த்தபோது செயலாளர் தனது காமராவில் கயிற்றில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.


42 வயதான அயேஷ் பெராரா என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் நீர்கொழும்பு  பிரதேச செயலாளராக  சில மாதங்களுக்கு முன்பே கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.


இவர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர். இவரது மனைவிக்கு அன்மையில் தலை பிரசவம் நடந்து குழந்தை மரணமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய மனைவி கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவ இடத்திற்கு நீர்கொழும்பு பொலிஸார் வருகைதந்து சடலத்தை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.




No comments

Powered by Blogger.