Header Ads



மகிழ்ச்சியான தகவல்


இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த விபரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதன்படி இந்த மின் கட்டண திருத்தம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான மின் உற்பத்தி திட்டம் மற்றும் மின்சார தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மின்சார கட்டணத்தை மாற்றியமைக்கப்படும்.


இதன்போது குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் மின் கட்டண திருத்த முன்மொழிவுகளை சமர்பிக்கும் செயல்முறையைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் ஜூலை 1 ஆம் திகதிகளில், மின் கட்டண திருத்தத்தின்படி முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

No comments

Powered by Blogger.