Header Ads



அமைச்சுப் பதவியை கைவிடத் தயார்

 
தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என பௌத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க  தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நாங்கள் ஏற்கனவே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அமைச்சரவையில் பல கட்சிகள் உள்ளன, மற்றவர்களும் பங்கேற்க வேண்டும். நாங்கள் எங்கள் அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.


மற்றவர்கள் வந்தால் எனது அமைச்சுப் பதவியை நான் கைவிடத் தயாராக இருக்கின்றேன். பெரிய அளவிலான அமைச்சரவைகள் நாட்டுக்கு உதவவில்லை.


எனவே, தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு  நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என குறிப்பிட்டார். 

1 comment:

  1. இலங்கைப் பாராளுமன்றத்தில் உள்ளவர்களில் ஒரேயொரு மனிதர். அவர் சாதாரண மனிதரல்ல. விவசாயத்துறையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பட்டதாரியும் விசேட பட்டம் பெற்றவரும் நிர்வாகத்தில் நேர்மையானவரும்கூட. இது போன்ற மனிதர்களுக்கு துரதிருஷ்டவசமாக அந்த தியவன்னாவ கட்டடத்தில் இருக்கத் தகுதி குறைவு. அதுதான் இவர் மனவேதனையடைந்து மேற்கூறியவாறு யாராவது தகுதிவாய்ந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு அவருடைய பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் எனக்கூறுவதன் அர்த்தம் அதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.