Header Ads



தேங்காய்களை திருடியவருக்கு அதிசயமான சிறைத் தண்டனை


1,200 ரூபாய் பெறுமதியான 20 தேங்காய்களை திருடிய ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூ​ழிய வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டை விதித்துள்ளது.


திவுலபிட்டிய, கெஹேல்​எல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்தே 20 தேங்காய்களை  அந்நபர் திருடியுள்ளார்.


தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தேங்காய்களை பறித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டன. அதில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட மேற்படி நபரை  இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை மினுவாங்கொட நீதவான்   விதித்துள்ளார்.


குற்றஞ்சாட்டப்பட்டவர் அந்தக் குற்றங்களை தான் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். எனினும், கைவிரல் அடையாளங்களின் பிரகாரம் அவ​ர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதனப்படையிலேயே ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


 குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட திவுலுப்பிட்டியவைச் சேர்ந்த அந்த நபர், 2021 ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.