கல்வி அமைச்சரின் அறிவிப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடாத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்றைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் சுமார் 7800 ஆசிரியர்களுக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்று 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
Post a Comment