Header Ads



ஜப்பான் செல்ல இருந்தவர் வபாத்



- கியாஸ் ஷாபி -

ஹபரனை - கொழும்பு வீதியில் நேற்று (4) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் சென்ற மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில், ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கிண்ணியா மாலிந்துறையை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸாம் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார். 


மேலும், இவரது உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான செய்யது முஹம்மது முஹம்மது றியாஸ் (வயது 40) என்பவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்தில் மரணமானவர் ஜப்பான் நாட்டுக்கு தொழிலுக்கு செல்வதற்காக அக்குறுனை பகுதி உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சந்திக்க சென்றபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வளைவு ஒன்றில் இருந்த மின் கம்பத்துடன் மோதி, இந்த விபத்தில் ஏற்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொஸார் மேலும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.