முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் அநீதி
- பாறுக் ஷிஹான் -
கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் புதன்கிழமை(11) இரவு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் கல்வி அமைச்சு தீர்வினை தற்போது வழங்கியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நீதிக்கான மய்யம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 08.02.2023 ஆம் திகதி முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தனர்.
கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ இந்து , இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாட நெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளில் 30 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். 2016இ 2017 ஆண்டுகளிலும் மூன்று பாடநெறிகளுக்கு சமமானவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
2022 ஆம் ஆண்டு கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இந்து சமய பாடத்திற்கு 40 (2019இ 2020) மாணவர்களையும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு தலா 20 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க இருப்பதாக வர்த்தமானியில் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.
இந்த வர்த்தமானியை ரத்து செய்து இஸ்லாம்இ கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு மாணவர்களை கூடுதலாக உள்வாங்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் நீதிக்கான மய்யம் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தது.
மேலும் இம்முறைப்பாட்டினை ஏற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கல்வி அமைச்சு குறித்த இரு பாடநெறிகளுக்கும் கூடுதல் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதிக்கான மய்யத்திற்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள பதிலில் சமூக நிறுவனங்கள் கல்வியலாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கல்வியற் கல்லூரிகளில் இஸ்லாம்இ கிறிஸ்தவ பாடங்களுக்கான மாணவர்களின் எண்ணிக்கை இஸ்லாம் பாடத்திற்கு 60 ஆகவும் கிறிஸ்தவ பாடத்திற்கு 34 ஆகவும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதனை நாம் வரவேற்கின்றோம்.அநீதி இளைக்கப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த நீதிக்கான மய்யத்திற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தற்போது தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
குறித்த ஊடக மாநாட்டில் நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயிலுடன் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் இணைந்திருந்தனர்.
இது தவிர நீதிக்கான மய்யம், முஸ்லிம் மாணவர்களிடமிருந்து ஞானசார தேரரின் சிபாரிசின் பேரில் பறிக்கப்பட்ட இஸ்லாம் பாட புத்தகத்தினை மீள பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment