Header Ads



மூடிய அறைக்குள் நடந்தது என்ன..?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த வாரம் மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பில் பலவேறு விடயங்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முக்கியமாக ஜனாதிபதித் தேர்தல் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது எனத் தெரியவருகின்றது.


மேலும், அதில் பல யோசனைகளை பசில் ராஜபக்ஷ முன்வத்தார் எனவும் அறிய முடிகின்றது.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையே மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்துதல், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்குதல் உள்ளிட்ட பல ஆலோசனைகளை ஜனாதிபதி ரணிலிடம் பசில் முன்வைத்தார் எனவும் தெரியவருகின்றது. JV

No comments

Powered by Blogger.