மஹிந்த உள்ளிட்ட பலருக்கு, தடை முற்றாக நீக்கம்
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனி நான் மக்கள் சொத்துக்களைக் களவாடவே இல்லை. மத்திய வங்கியிலிருந்து கொள்ளையடித்த கோடான கோடி டொலர்களை இரகசியமாக சிரிலங்கன் விமானத்தைப் பயன்படுத்தி உகண்டாவில் கொண்டு போய் பதுக்கவுமில்லை. பாதைகள் அமைத்தல், கொன்ரக்குகள் செய்யும் போது பெறும் கோடான கோடி கப்பம், கொள்ளையடித்த பணத்தை சீசெலஸ் போன்ற நாடுகளில் கொண்டு போய் பதுக்கவுமில்லை. எனது இரண்டு கைகளையும் சோப் போட்டுக் களுவினால் சுத்தமாகவே இருக்கின்றது, எனவே நான் களவாடவில்லை என மற்றொரு ஓர்டரையும் கொண்டு வந்து கொடுக்கும் காலம் மிகவிரைவில எதிர்பார்க்கலாம்.
ReplyDelete