பலவந்த ஜனாசா எரிப்பு - வழக்கு தொடர தீர்மானம்
(எஸ்.என்.எம்.சுஹைல், எம்.வை.எம்.சியாம்)
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரித்தமை தொடர்பாக அப்போதைய அமைச்சரவை, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் மற்றும் நிபுணர் குழு ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மருதானையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நிபுணத்துவ குழுவின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார். அவரும் கோத்தாபயவின் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்தவர் என்ற ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டும்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது. எனினும், இலங்கையில் அடக்கம் செய்வதற்கு கோத்தாபய அரசாங்கம் அனுமதி விழங்கவில்லை. அவர்களின் கடும்போக்குவாத சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொள்கை காரணமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
இது குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு, மனித உரிமைகள் ஸ்தாபனம் மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தும், அவற்றை கண்டுகொள்ளாது ஜனாசாக்கள் எரிக்கப்பட்டன. இலங்கை முஸ்லிம்களை வேண்டுமென்றே அவர்கள் கொதிப்படையச் செய்தனர்.
இந்நிலையில், ஜனாசா எரிப்பது தொடர்பில் நிபுணத்துவக் குழுவே பிழையாக வழி காட்டியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருக்கிறார். அவர் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை கருத்திற்கொண்டு தப்பித்துக்கொள்ளவே இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவ மக்களையும் இன்னும் சில தரப்பினரையும் வெகுவாக பாதிப்படையச் செய்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் உடலங்களை எரித்த விவகாரமானது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருக்கிறோம். இது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம் நீதிமன்றத்தை நாடுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
குறிப்பாக அப்போதைய அமைச்சரவை, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் மற்றும் நிபுணர்கள் குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும்படியும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். -Vidivelli
உலக சனத் தொகையான 7 பில்லியன் மக்களில் 6/1 பகுதி அல்லது உலகில் வாழும் 1.7 பில்லியன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் அடிப்படை உரிமையை தூக்கி எறிந்து சர்வதேச நிறுவனங்களும், சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அநியாயத்துக்கு எதிராக குரல் எழுப்பும் போது அந்த சைத்தான் கோதாவும் அவனுடைய கெட்ட சைத்தானிய கையாட்களும் சேர்ந்து உலக முஸ்லிம்கள் 1.7 பில்லியன் முஸ்லிம்களையும் புண்படுத்திய அநியாயத்துக்கு எதிராகவும் அவர்கள் அனைவருக்கும் நியாயமான நட்டஈட்டையும் இழப்பையும் கோரும் வழக்கு மிகவும் நுணுக்கமாகவும், ஆழமாகவும், சட்டத்தின் பல்வேறு சர்த்துக்கள், நிபந்தனைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த சட்ட நுணுக்கங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற சட்ட அறிஞர்கள், அவர்கள் யாராக இருந்த போதிலும் அவர்களையும் உள்வாங்கி மிகவும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயம் தான் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு. இதனை நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முன்பு கீழ்மட்டத்திலிருந்து அதாவது மாவட்ட நீதிமன்றங்களில் தனிப்பட்ட நபர்களின் உரிமை கோரல் வழக்குகிளல் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேல் சென்றால் அந்த வழக்கில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். நான் ஏன் இதனை கூறுகின்றேன் என்றால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அந்த வழக்கை இலகுவில் தள்ளிவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகம். கீழ்மட்டத்தில் இருந்து தோல்வியடைந்தாலும் அதன் நுணுக்கங்களை முன்வைத்து அந்த வழக்கை அப்பீல் பண்ணமுடியும். இது எனது மிகப் பணிவான கருத்து. சட்டவல்லுனர்கள் இதனைச் சரியாக மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. யாஅல்லாஹ் எமது சமூகத்தில் குழந்தைகளை அவர்களின் கண் முன்னே எரித்த தாயை,தந்தையை, சகோதர சகோதரிகளை உடன்பிறப்புகளுக்கு முன்னால் எரித்து சாம்பலாக்கிய அந்த கெட்ட காபிர்களுக்கு சரியான தண்டனையையும் அந்த தாங்கமுடியாத, ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு சரியான நட்டஈட்டை உலகிலும் அதற்கு பலமடங்கு வெகுமதிகளை மறுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உறவுகளுக்கும் வழங்குவானாக எனநாம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.
ReplyDelete