அறிவித்தல் விடுத்தும், ராஜினாமா செய்யாதவர்கள்
தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அதிபர் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீதித்துறையின் முன்னாள் பலம் வாய்ந்த ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
பதவிகளை இராஜினாமா செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இந்த முன்னாள் நீதியரசரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஆளுநர்களை நியமிப்பதற்காக நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அதிபர் செயலகம் அறிவித்து சில நாட்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ibc
பொதுமக்களின் ஆதரவு, ஒத்துழைப்பு இன்றி, வெறும் பஞ்சப்பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்ததன் பலத்தை தற்போது ரணில் அனுபவிக்கப் போகின்றார். பொதுமக்களின் ஆதரவு இன்றி இந்த சானாதிபதிப் பதவிகளில் தங்கியிருக்க முடியாது என்பதை செயல்ரீதியாக அவர் காணப் போகின்றார். பதவியின் மீது கவர்கனர்களுக்குள்ள அதீத பேராசையும், வெறும் தாள்களில் ரணிலுக்கு உள்ள வரையறையற்ற அதிகாரமும் நீதிமன்றத்தில் நிறுக்கப்படும் போது பொதுமக்களின் ஆதரவு நிச்சியம் முன்னிலையில் இருக்கும். என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete