மாவீரன்திப்பு சுல்தானின் வாள், மிகப்பெறும் பெறுமதியில் ஏலம்
அவர்களுக்கு அடிபணியாமல் எதிர்த்து போரிட்டனர். இதில் பலர் தங்களது இன்னுயிரை இழந்தனர். அவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவருமாக மைசூருவின் புலி என்று அழைக்கப்படக்கூடிய திப்பு சுல்தான் விளங்குகிறார்.
கடந்த 1750ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த திப்பு சுல்தான், மைசூர் பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு காரணமான புதிய நில வருவாய் அமைப்பு உள்பட பல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
காலனித்துவ எதிர்ப்பின் வீரனாகக் கொண்டாடப்படும் திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் வாள் ஒன்று தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு அந்த வாள் விற்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 140 கோடி ரூபாய். ஏலத்தை ஏற்பாடு செய்திருந்த ஏல நிறுவனமான போன்ஹாம்ஸ், "நாங்கள் கணித்ததை விட ஏழு மடங்கு விலைக்கு வாள் விற்கப்பட்டுள்ளது. திப்புவின் ஆயுதங்களில் மிக முக்கியமானவை இந்த வாள்" என தெரிவித்துள்ளது.
துல்லியமாக வடிவமைக்கப்பட்ட தங்க எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட வாள், ஐந்து தெய்வீக குணங்களைக் குறிக்கும் சின்னங்களையும், கடவுளுக்கு இரண்டு அழைப்புகளையும் கொண்டுள்ளது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட சேரிங்காபட்டம் மீதான தாக்குதலின் போது அவரது துணிச்சலையும் தலைமைத்துவத்தையும் அங்கீகரிப்பதற்காக மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு இது வழங்கப்பட்டது என்று போன்ஹாம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment