Header Ads



அக்கரைப்பற்றில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு


- ரீ.எல்.ஜவ்பர்கான் -

அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்பின் பேரில் நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தபட்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது காத்தான்குடி பொலிஸார் பூநொச்சிமுனை உள்வீதியில் நடத்திய திடீர் சோதனையில் குறித்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவுமின்றி காணப்பட்டதால் இதனை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர்.


குறித்த  மோட்டார் சைக்கிள் தொடர்பாக நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் காத்தான்குடி பொலிஸார் அறிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று பகுதியில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் இதுவென அக்கரைப்பற்று பொலிஸார் முலம் உறுதிப்படுத்தப்பட்டது.


குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தரவிட்டார். 


No comments

Powered by Blogger.