பெண்ணின் மரணத்தில் மர்மம்
தங்கொடுவ - மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நடிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து குறித்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது. குறித்த பெண் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், இலங்கை செல்ல விரும்புவதாகவும் தனது தோழிக்கு வாட்ஸ்அப் குரல் பதிவொன்றை அனுப்பியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மரணத்தை தற்கொலையாக ஏற்க மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சிங்கப்பூரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இவரது மரணம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment