இலங்கைப் பெண் மரணம் - குவைத் இளைஞன் கைது
குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் குவைத்தை தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர், கவனகுறைவான முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய இளைஞன் தைமா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment