"ஹஜ்ஜுக்குப் போகிறேன் எனச் சொல்லாதீர்கள்..."
கஃபாவின் ரப்பான அல்லாஹ் என்னை உம்ரா, ஹஜ்ஜிற்கு வருமாறு அழைத்துள்ளான் எனச் சொல்லுங்கள்
ஏனென்றால், செல்வங்களைச் சேர்த்து வைத்திருந்த எத்தனையோ செல்வந்தர்கள் ஹஜ் செய்யும் பாக்கியமில்லாதவர்களாக மரணித்து விடுகிறார்கள்.
அல்லாஹ் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்குத்தான் ஹஜ்ஜிற்குச் செல்லும் வழியை லேசாக்குகிறான்.
எனவேதான் இஹ்ராம் கட்டும்போது அல்லாஹும்மலெப்பைக் ஹஜ்ஜன்
யா அல்லாஹ் உன் அழைப்பை ஏற்று, ஹஜ்ஜிற்கு நிய்யத் செய்கிறேன் எனக்கூறி, இஹ்ராம் கட்ட வேண்டும்
பின் கஃபாவைக் காணும் வரை
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக்! இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக்க வல் முல்க்! லாஷரீக்க லக்!
யாஅல்லாஹ் உன் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்! உனக்கு இணை யாருமில்லை. நிச்சயமாக அனைத்துப் புகழும், அனைத்து அருட்கொடைகளும் ஆட்சி அதிகாரமும் உனக்கே உரியன! உனக்கு இணை யாருமில்லை!)
என தல்பிய்யாவை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
இக்லாஸுடன் ஹஜ் செய்யும் பாக்கியத்தை, அல்லாஹ் நம்மனைவருக்கும் தருவானாக
Muhammed Ismail Najee Manbayee
Post a Comment