Header Ads



மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, பெல்டினால் தாக்கிய இலங்கையர் கைது


தமது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கியதாக கூறப்படும் இலங்கை ஒருவர் இங்கிலாந்தின் மென்சஸ்டரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


45 வயதான இந்த இலங்கையரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றனர். இதன்பின்னர் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறினர். அந்த காலம் தொட்டே குறித்த இலங்கையர், தமது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை.இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கைப் பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.