யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்து
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து இம்முறை 2023 க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 2023.05.26 ஆம் திகதி கல்லூரி பரிதி அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி பரீட்சைக்காக அனுப்பிவைத்தனர்.
தகவல்
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு
Post a Comment