Header Ads



உகண்டா சென்று பணத்தை கொண்டு வாருங்கள்


ராஜபக்ச குடும்பத்தினர் உகாண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீள வழங்குமாறு உகாண்டா ஜனாதிபதியிடம் கோருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மாத்தறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையிலிருந்து ராஜபக்சவினர் உகாண்டாவிற்கு விமானங்களில் பணத்தினை எடுத்துச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டதாகவும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் இது தொடர்பில் பதாகைகளைத் தொங்கவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


எனினும் இன்றும் நாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கத் தயார் எனவும், உகாண்டாவிலிருந்து பணத்தை மீளக்கொண்டுவருவதற்கு ஜனாதிபதியை தலையிடுமாறு கோரவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.


மேலும், அன்றைய தினம் பதாதைகளை ஏந்தியிருந்தவர்களும் உகண்டா சென்று பணத்தை கொண்டு வர தலையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாட்டு மக்களின் பணத்தையும் இலங்கை மத்திய வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நாட்டின் பாதுகாப்பான வைப்புக்களான கோடான கோடி டொலர்களையும், நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தையும் களவாடி பஞ்சத்தில் பறக்கும் சிறீலங்கன் விமானத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் உகண்டா கொண்டு சென்று அங்கு 18 மேற்பட்ட பல்துறை கம்பனிகளையும் ஆரம்பித்து அவற்றை நடாத்த அங்கு வாழும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களிடம் பொறுப்படைத்து திரும்பி வந்து இவற்றைப் படுபொய், எமக்கு அநியாயமாக படுதூறு சொல்கிறார்கள் இலங்கையர்கள் எனக்கூறித் திரிந்த நாமலின் பேச்சு இப்போது திடீரென மாறியது ஏன்? வௌிநாட்டு பத்திரிகைகள் அவற்றை மிகத் தௌிவாக வௌியிடுகின்றன. இப்போது நாமலுக்கோ ராஜபக்ஸ குடும்பத்துக்கோ உகண்டாவில் நுழைய முடியாதவாறு அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்கள். அதனால்தான் வழியின்றி அவற்றைத் திருப்பிப் பெற சனாதிபதியை நாடுகின்றார்கள். உண்மையென்னவென்றால் ்அவை ஒருபோதும் ராஜபக்ஸாக்களுக்கு திருப்பிக் கிடைப்பதில்லை. அவற்றை புலிகளும் உகண்டாவின் மோசடிக்கார, கொள்ளைக்கார அரசாங்கமும் சேர்ந்து பங்குவைத்துக் கொண்டு இந்த நாட்டு மக்களின் சொத்துக்களை அனுபவிப்பார்கள். நடக்கப் போவது அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.