தர்பூசணியின் நிறம் என்ன..?🍉
அத்தோடு சில ஆண்டுகளாக நானாக கண்டுபிடித்த ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்பது வழக்கம். அது என்ன கேள்வி? தர்பூசணியின் நிறம் என்ன? என்பதுதான் அது.
எல்லாப் பிள்ளைகளிடமும் இதே கேள்வியைத்தான் இவர் காலாகாலமாக கேட்டு வருகிறார், இவருக்கு வேறு கேள்விகளே இல்லையா என பெற்றோர்கள் மற்றும் சக ஊழியர்கள்
என்னை பரிகாசம் செய்வதுண்டு.
ஆம், இது சாதாரண ஒரு கேள்வி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் இதற்கு பிள்ளைகள் அளிக்கும் பதிலில் அவர்களின் அறிவுத்திறனும் ஆளுமை வளர்ச்சியும் எப்படி வெளிப்படுகிறது என்ற இரகசியத்தை உங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்.
தர்பூசணியின் நிறம் சிவப்பு என்று சொல்லும் பிள்ளையை பொறுத்தவரை, அவன் பெற்றோர்களை சார்ந்து வாழும் பிள்ளை, அவன் பெற்றோர்களுடன் தர்ப்பூசணி வாங்க செல்வதுமில்லை, அதை வெட்டுவதற்கு உதவுவதும் இல்லை. தட்டில் வைக்கப்படும் போது ஒரு விருந்தாளி போல வந்து உண்ணுவான்.
தர்பூசணியின் நிறம் பச்சை என்று சொல்லும் பிள்ளையை பொறுத்தவரை பெற்றோர்களுடன் அதனை வாங்க, வெட்ட பங்கெடுக்கிறான் என்று அர்த்தம்.
உள் நிறமா, வெளி நிறமா? என கேள்வி கேட்கும் பிள்ளையை பொறுத்தவரை, இவன் புத்திசாலித்தனமானவன், விவரமானவன் துல்லியமாக ஆய்வு செய்பவன், விவாதத் திறனுள்ளவன், உரையாடளை விரும்பும்க்கூடியவன்.
வெளிப்புறம் பச்சை, உற்புறம் சிவப்பு என உடனே பதில் சொல்லும் பிள்ளையை பொறுத்தவரை, இவனும் மிகவும் புத்திசாலித்தனமானவன்தான், தெளிவும் அறிவும் உள்ளவன்தான், ஆனால் விவாதத்தை விரும்பாதவன்.
தர்பூசணியின் நிறத்துடன் எந்த தொடர்பும் இல்லாத (வெள்ளை நிறம், நீல நிறம்) போன்ற பதில்களை சொல்லும் பிள்ளைகளை பொறுத்தவரை அவர்கள் மந்தமான அறிவுள்ளவர்களாக இருப்பார்கள், நிறங்கள் பற்றிய போதிய தெளிவு இருக்காது, இவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டி வரும்.
பதிளே அளிக்காமல் வெட்கத்தால் தாயின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பிள்ளைகள், அல்லது அம்மா அப்பா கேள்விக்கு பதில் சொல்லும் வரை கித்திருக்கும் பிள்ளைகளைப் பொறுத்தவரை, முதலில் அவர்களை இந்த கூச்ச சுபாவத்திலிருந்து வெளிவர மிகவும் பாடுபட வேண்டியிருக்கும்.
இவர்களுக்கும் கற்பிக்க ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டி வரும்.
✍ ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment