படோவிட்ட லொகு மல்லி கைது
பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகா ஒருவரை ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ´படோவிட்ட லொகு மல்லி´ என அழைக்கப்படும் சமிந்த குமார சில்வா என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், அத்திடிய, லேக் வீதி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் காரில் பயணித்த போதே கைது செய்யப்பட்டதாகவும், 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 300,000 ரூபா பணம், 2 கூரிய ஆயுதங்களும் வாகனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment