Header Ads



மரிக்காரின் முறைப்பாடு நிராகரிப்பு - அலி சப்ரி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு


சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்   பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார்.


​அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவிநீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்.


வாக்கெடுப்பை நடத்துவதற்கான வாக்கெடுப்பு அழைப்பு மணி ஒழிக்கப்பட்டபோது சபைக்குள் பிரவேசித்தார்.கோர மணியின் சத்தம் நிறைவடைந்ததும் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


அதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மரிக்கார், சபாநாயகர் அவர்களே! தங்கம் கடத்திய எம்.பி, வாக்களிக்க வந்துள்ளார் என்றார்.


எனினும், அது ஒழுங்குப்பிரச்சினை இல்லையென கூறிய சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பின் போது, அலி சப்ரி ரஹீம், எதிராக வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.