தாக்குதலுக்காக காத்திருக்கும் மேர்வினின் அடியாட்கள்
‘‘தற்போது வெளிநாட்டில் உள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நீர்கொழும்புக்கு வருவதை தாம் எதிர்பார்ப்பதாகவும், அவர் வந்தால் தாக்குதல் நடத்துவதற்கு தமது ஆட்கள் காத்திருப்பதாகவும்‘‘ முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்பு மற்றும் இனவாதத்தை தூண்டியதற்காக ஜெரோம் போன்றவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோம் அதிகளவில் டொலர்களைப் பெற்று வந்துள்ளார். அத்துடன் அவரைப் போன்ற பொது அறிக்கைகளை வெளியிடுபவர்களும் டொலர்களைப் பெறுகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியும் ஜெரோமைப் பின்பற்றுபவர் என்றும், சில அரசியல்வாதிகளும் ஜெரோமை பின்பற்றுபவர்கள் என்றும் மேவின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச உட்பட சில அரசியல்வாதிகள், மௌனமாக இருப்பதன் மூலம் தெளிவாக தெரிவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment