Header Ads



வகுப்பாசிரியரிடம் கூறிய மாணவிகள் - பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது


தான் வளர்த்து வந்த பெறாமக்கள் இருவரை வன்கொடுமை புரிந்தார் எனற சந்தேகத்தின் அடிப்படையில் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.


12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.


நோர்வூட் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் தந்தை மறுமணம் முடித்துள்ளார் இந்த இரண்டு சிறுமிகளும் பெரியப்பாவின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.


தாம் பெரியப்பாவால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் இவ்விரு சிறுமிகளும் தமது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் இவ்விரு சிறுமிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து பெரியப்பா கைது செய்யப்பட்ட நிலையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 15 ஆம் தகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோர்வூட் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.