முஸ்லிம் சமூகமே - திருடர்களின் கரங்களில் இருந்து, கல் எளிய அரபுக் கல்லூரியை பாதுகாக்க அணிதிரள்வோம்
ஸ்தாபக நோக்கம் :
அறபு கற்கையையும் இஸ்லாமியக் கற்கைகளையும் முக்கியமாக இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடையே மேம்படுத்தல். (பாராளுமன்றத்தால் கூட்டிணைக்கப்பட்ட சட்டம்
https://drive.google.com/file/d/17QlH5T97u3TpnbJlM4V-dFx_kgcX-r96/view?usp=share_link )
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட திகதி : 10 ஜனவரி 1959
பாடசாலையின் வகை :
கல்விக் கட்டளைச் சட்டத்தின்படி அரச உதவி பெறும் பாடசாலை (Assisted School)
பாடசாலையின் நிர்வாகச் செலவுகளுக்கான நிதியீட்ட மூலங்கள் :
1. மாணவர்களிடம் இருந்து பெறப்படும் மாதாந்தக் கட்டணம்.
2. பாடசாலைக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள் ( கொழும்பிலுள்ள கட்டடங்கள், காணிகள்)
3. ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கும் அரச உதவிகள்.
4. அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசப் பாடப் புத்தகங்கள்.
5. குவைத் நாட்டின் “பைத் அல் ஸகாத்” நிறுவனத்தின் நன்கொடைகள் மற்றும் அநாதைகள் பராமரிப்பு உதவித்தொகைகள்.
6. ஸஊதி அரேபியாவின் அல் ஆமூதி, பா தவீல் , ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் ஸர்ஊனி குடும்பத்தினர் போன்றவர்களின் தொடர்ச்சியான உதவிகள்.
7. உள்நாட்டுத் தனவந்தர்களின் உதவிகள்.
8. பெற்றார்களின் நன்கொடைகள், பொருள் உதவிகள்
9. பழைய மாணவிகள் சங்கத்தின் பண, பொருள் உதவிகள்.
10. மாணவிகளின் மேலதிக அன்பளிப்புகள், மீளளிக்கப்படாத சேர்வுக் கட்டணங்கள்.
குறிப்பு : கல்லூரியின் 13 ஏக்கர் வளாகத்துக்குள் காணப்படும் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் பெறுமதியான சகல கட்டடங்கள், பௌதீக வளங்கள் , வாகனங்கள், கொழும்பில் உள்ள வாடகை வருமானம் தரும் கட்டடங்கள் யாவும் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வழியில் கிடைக்கப் பெற்றவை என்பது ஆதாரபூர்வமான உண்மையாகும் . வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு கணக்கறிக்கை பகிரங்கப் படுத்தப்படாததால் இவை பற்றி அறியாமல் இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதிகளும் சலுகைகளும்
வலயக் கல்விப் பணிமனையின் ஆலோசனைகள், மேற்பார்வைகள், வழிகாட்டல்கள், பயிற்சி நெறிகள், வினாத் தாள்கள், இலவசப் பாடப் புத்தகங்கள், நன்னடத்தைப் பிரிவுப் பிள்ளைகளுக்கான நிதி உதவிகள்.
“பொது நிறுவனம்” என்பதற்கான இலங்கை மற்றும் பிற நாட்டு அரச அங்கீகாரங்களும் ஆதாரங்களும்
1. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட தர்ம ஸ்தாபனம்
அட்டவணையில் 52 ஆவது நிறுவனம்.
2. அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு மற்றும் அநாதை இல்லம்.
( https://probation.wp.gov.lk/en/?page_id=671 கம்பஹா மாவட்டம் #21)
3. முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. (MRCA/13/1/AC/12)
4. பாராளுமன்றத்தால் கூட்டிணைக்கப்பட்டது. (46 of 1991 )
(https://drive.google.com/file/d/17QlH5T97u3TpnbJlM4V-dFx_kgcX-r96/view?usp=share_link )
5. மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட அரச உதவி பெறும் பாடசாலை.
6. குவைத் அரசின் நிதியுதவி பெறும் நிறுவனம். (இறுதியாக அனாதைகளின் பெயரால் பெறப்பட்ட, தற்போது நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் “பைத் அல் ஸக்காத்” கட்டடத்தின் பெறுமதி 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் )
நிர்வாகம் :
“முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி பரிபாலன சங்கம்- கல் எளிய ”
கல்லூரிப் பரிபாலன சங்கத்தின் யாப்பு (தமிழ் மொழி பெயர்ப்பு ) :
https://drive.google.com/file/d/1jaxqvdXRHRUb3KsVULPGR8VSbwILnj_4/view?usp=share_link
நிர்வாக முறைமை :
மேற்படி பரிபாலன சங்கத்தால் தெரிவு செய்யப்படும் முகாமைத்துவ சபை ஊடாக கல்லூரி நிர்வகிக்கப்படும்.
பரிபாலன சங்கத்தில் அங்கத்துவம் பெறுதல் :
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி பரிபாலன சங்கத்தின் யாப்பின்படி 21 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் அங்கத்துவராக இணையத் தகுதி உடையவராவார். விண்ணப்பதாரி 25/- ரூபாய் வருட சந்தா செலுத்த முடியுமாக இருகக்கவேண்டும். அங்கத்துவத்தை ஏற்றுக்கொள்வது பரிபாலன சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாமைத்துவ சபையின் முடிவாகும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை வரையறை அற்றது.
பரிபாலன சங்கம் இயங்கவேண்டிய முறையும் அடிப்படை நோக்கமும் :
வருடா வருடம் பொதுக்குழு கூட்டப்படுதல் வேண்டும்.
சங்கத்தின் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.
முகாமைத்துவ சபையில் ஏதேனும் பதவி வெற்றிடம் ஏற்படின் அது நிரப்பபட வேண்டும்.
முடிவுகள் எடுக்கப்படும் விதம் :
பரிபாலன சங்க யாப்பின்படி சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபையில் 04 (நான்கு) பேர் ஒருமித்த கருத்துக்கொண்டால் அது முடிவாக அமையும்.
பிரச்சினைக் கூற்று:
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் மேற்குறிப்பட்டவாறான சட்ட ரீதியான பரிபாலன சங்கமோ, சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபையோ இல்லை. இவ்வாறான ஒரு சபை இல்லாமையே சகல பிரச்சினைக்கும் அடிப்படைக் காரணமாகும்.
முகாமைத்துவ சபை என்று தற்போது காட்டப்படும் நிர்வாகம் ஒரே குடும்பத்தின் சில உறுப்பினர்கள் சட்ட ரீதியற்ற முறையில் தம்மைத் தாமே முகாமைத்துவ சபையாகக் காட்டி, தமது ஊழலுக்குத் துணை போகும் மேலும் சிலரை இணைத்து நடத்தும் ஒரு குழுமம் மட்டுமே ஆகும். அது சட்ட விரோதமான ஆட்களின் ஒரு தொகுதியாகும். முகாமைத்துவ சபை என்ற பண்பு அதில் காணப்படவில்லை.
சட்ட ரீதியான ஒரு பரிபாலன சபை யும் முகாமைத்துவ சபையும் இல்லாமையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சில :
1- முகாமைத்துவ சபையில் முடிவெடுக்கும் 4 பேருமே ஒரே குடும்பததைச் சேர்ந்தவர்களாகவே உள்ளமை. சகல முடிவுகளையும் தமது ஏகபோக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதை முதன்மை இலக்காகக் கொண்டு எடுத்தல்.
2- கல்லூரிக்குச் சொந்தமான பல அசையாச் சொத்துக்கள் முகாமைத்துவ சபையில் உள்ள ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட தேவைக்காக விற்கப்பட்டுள்ளமையும் இன்னும் விற்க முயற்சிப்பதும்.
3- இதுவரைக்கும் அறியப்பட்டதன் பிரகாரம் 5 கோடி ரூபாய் பொது நிதி, முதலீடு என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டமை. (ஆதாரம்: பொருளாளர் மற்றும் சட்ட ரீதியான செயலாளர் ஆகியோரது கடிதம்
https://drive.google.com/file/d/17pHWcCza_tSSj3eMZ19r-nOHyrzNCkkw/view?usp=share_link )
4- பரிபாலன சங்கத்தின் சட்ட ரீதியான பொருளாளர் / தனாதிகாரிக்குத் (Treasurer) தெரியாமலே நிதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுதல்.
5- சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்தல்.
6- தமக்கு விரும்பிய, ஒத்தூதக்கூடிய நபர்களை முகாமைத்துவ சபைக்குள் ஈர்த்தல்.
7- தமது சட்ட விரோத, திருட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத உத்தியோகத்தர்களைப் பதவி நீக்குதல் அல்லது விலகிச் செல்ல நிர்ப்பந்திதல். உதாரணமாக :
1. கல்லூரியின் முகாமைத்துவச் சபைச் செயலாளர் Al Haj Moulavi A.R.M.Roohul Haq
2.முன்னாள் முகாமையாளர் ஜனாப். Hussain
3.முன்னாள் அதிபர் மௌலவியா Jaleela Shafeeq
4.முன்னாள் உப அதிபர் மௌலவியா Naseema Jamaldeen
5.பொது முகாமையாளர் ஜனாப் Affan Abdul Haleem
8- கல்லூரியின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தல்.
9- தாம் முன்னர் எடுத்த கொள்கை முடிவுகளுக்கு முரணான முடிவுகளை தமது தேவைக்கேற்றாற்போல் பின்னர் மாற்றியமைத்தல்.
10- பிரதித் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த திரு. அர்ஷாட், திரு. தில்ஷாட் என்ற இருவர் திருட்டுத் தனமாக, சட்டரீதியற்ற முறையில் முகாமைத்துவ சபை அங்கத்தவர்கள் என்று கூறி முகாமைத்துவ சபையைக் கைப்பற்ற முயற்சித்தல்.
11- பொதுச் சொத்தான கல்லூரியை தனியார் சொத்து என முட்டாள்தனமாக வெளிக்காட்டியமை.
12- கல்லூரியின் ஸ்தாபக நோக்கமான “அரபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள்” வீழ்ச்சி அடைந்துள்ளன என்ற பிரமையை ஏற்படுத்தி அக்கற்கைகளை இல்லாதொழிக்க முயல்கின்றமை.
திருட்டுத் தனமாக, சட்டரீதியற்ற முறையில் (ILLEGAL) வந்த அர்ஷாட், தில்ஷாட் என்பவர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள மேற்கொண்ட , மேற்கொள்கின்ற சில வழிமுறைகள்
1- பொது முகாமையாளரைப் பணி நீக்கம் செய்தமை.
2- கல்லூரிக்குள் சதித் திட்டம் தீட்டும் குழுவையும் இடத்தையும் (WAR ROOM) ஸ்தாபித்தமை.
3- சட்ட ரீதியான பொருளாளர் ஜனாப். கலீல் அவர்களுக்குத் தெரியாமல், பிரதிப் பொது முகாமையாளர் திரு. அஹ்மத் (தொப்பி) அவர்களின் உதவியோடு அனாதைகளினதும் மாணவிகளதும் பணம் வைப்பிலிடப்படும் கணக்கு உட்பட கல்லூரியின் சகல வங்கிக் கணக்குகளிலும் தனது பெயரையும் உட்படுத்த ILLEGAL தில்ஷாட் முயற்சித்தமை.
4- செயற்கையான நீர்த் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி அதைத் தீர்த்து வைப்பதாகக் கூறி “கஹட்டோவிட்ட நிசார்” என்பவனை மீண்டும் வேலைக்கு அமர்த்தியமையும், அவனைக் கொண்டு மாணவிகளைத் தொந்தரவு செய்தல்.
5- தமக்கு அதிகாரமற்ற நிலையில் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தல் கடிதங்களை அனுப்பி அடிப்படை உரிமைகளை மீறியமை.
6- பொருளாளர் கலீல் ஹாஜியார் அவர்களுக்கு வரவு செலவுக் கணக்கறிக்கைகளை வழங்காமல் அவரைப் புறக்கணிப்பதன் மூலம் உளரீதியாகத் தாக்குதல்.
7- கலீல் ஹாஜியார் அவரகளது சொந்த ஊரான கல் எளியவிற்குள்ளேயே அவரைப்பற்றிய கட்டுக் கதைகளைப் பரப்புதல்.
8- போலி மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து கேவலமான கட்டுக் கதைகள் மூலம் நிர்வாகத்தினரையும் ஆசிரியர்கள் ஆசிரியைகளையும் சட்ட ரீதியான பொருளாளரையும் அச்சுறுத்தல்.
9- கல்லூரிக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள கட்டடங்களின் வாடகை வருமானத்தைத் தமது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கப்படும் நிதியைப் போல் காட்டி ஊர் மக்களிடையே தாம் கொடைவள்ளல்கள் என்ற ஒரு பிரமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை.
10- ILLEGAL தில்ஷாட், தனது மனைவி (கல்லூரியின் பழைய மாணவி) மூலமாக சிறிய குழுவொன்றை வைத்து கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தைப் பிளவுபடுத்த முயன்றமை.
11- ஆசிரியர் குழாம் உட்பட சகல ஊழியர்களையும் அச்சுறுத்தி தொழில் சட்டத்திற்கு விரோதமாக, பலவந்தமாகக் கையெழுத்துப் பெற்றமை.
(https://drive.google.com/file/d/1qfjpY4n5dqso7ImCg6XrJe67hxahPmJd/view?usp=share_link )
12- Private Property என அறிவித்து, இக்கல்லூரியில் அரபு, இஸ்லாமியக் கற்கைகளை நிறுத்தி விட்டு, சர்வதேச ஆங்கிலப் பாடசாலையாக முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை மாற்றத் திட்டமிடுதல்.
13- தமது பெயர்களை முகாமைத்துவ சபை உறுப்பினர்களாக அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தியமை.
14- அனாதைப் பிள்ளைகளைத் தனியாக அழைத்து மிரட்டல் விடுத்தல்.
15- அனாதைப் பிள்ளைகளை அச்சுறுத்தி பலவந்தமாகக் கல்லூரியிலிருந்து வெளியேற்றி சிறைச்சாலைக்கு அனுப்பியமை.
16- அனாதைகளுக்காகவே வழங்கப்பட்ட சொத்துக்களைச் சூறையாடிவிட்டு அனாதைப் பிரிவை சிறிது சிறிதாக நிரந்தரமாகவே மூடிவிட முயற்சிக்கின்றமை.
17- தமது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் காசாளர்கள் மற்றும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் மற்றும் சம்பள உயர்வுகள்.
18- வெளிவாரியான உதவிகளைப் பெரும் ஏழை மாணவிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்களிடம் மாணவிகளுக்கு வழங்கும் உதவியை நிறுத்தக் கோருதல் . ( உதாரணமாக Serandib Foundation)
இவ்விரு ILLEGAL களும் செய்த இன்னும் பல சதிகளும் திட்டங்களும் உரிய சமயத்தில் வெளியிடப்படும்.
இந்த அனர்த்த நிலைமையிலிருந்து வெளியேறும் வழி
1- சகல பெற்றோரும் பரிபாலன சபை அங்கத்துவத்திற்கு விண்ணப்பித்தல்.
2- கடைசியாக அறியப்பட்ட நிர்வாக சபையான, கல்லூரியின் முகாமைத்துவ சபையின் வங்கிக் கணக்கில் கையொப்பமிடும் அதிகாரம் உள்ள
I. Mr.Fayas Saleem (Vice President) (0777788799, 0717788788)
II. Mr.N.M.M.Mifly (Secretary) (0772246262) இன்றுவரைக்கும் சட்ட ரீதியான செயலாளர்
III. Mr.A.H.M.Kaleel (Treasurer) (0771707888)
ஆகியோரைக் கொண்ட முகாமைத்துவ சபை மேற்படி அங்கத்துவ விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஏற்றல்
3- பொதுச் சபையைக் கூட்டல்.
4- புதிய முகாமைத்துவ சபையை உருவாக்கல் .
5- மேற்படி ILLEGAL Dilshard, Arshad ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெளிவாக உள்ளமையால், அவர்கள் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவது நிரந்தரமாகத் தடை செய்யப்படுவதோடு அவர்களுக்கெதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தல்.
6- இந்த இருவரும் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளை மீள் பரிசீலனை செய்து, அதில் எங்காவது மாணவிகளின் அல்லது ஊழியர்களின் உரிமைகள் மீறப்பட்டிருப்பது அறியப்பட்டால், அதற்கான பொறுப்புக் கூறவைத்தல்.
இன்ஷா அல்லாஹ் பெற்றோராகிய நாமும் சமூக ஆர்வலர்களும் பழைய மாணவிகள் அமைப்புடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தக் கல்லூரியை அதன் ஸ்தாபக நோக்கத்தின் வழியில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்; திருடர்களின் கரங்களில் இருந்து இக்கல்லூரியைப் பாதுகாப்போம்; வெளிப்படைத் தன்மையினை உருவாக்குவோம்; ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம்; கல்லூரியின் வளர்ச்சியில் பங்கெடுப்போம்.
Post a Comment