Header Ads



பஸில் குறித்து, சாகர வெளியிட்டுள்ள தகவல்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பஸில் ராஜபக்சவுக்கு எந்தப் பதவியும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தகவலை வெளியிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், "மொட்டுக் கட்சியில் பஸில் ராஜபக்சவுக்கு எந்தப் பதவியும் இல்லை. அவர் கட்சியின் ஸ்தாபகர் மட்டுமே.


அவரை மொட்டுவின் தேசிய அமைப்பாளர் என்று ஊடகங்கள் கூறினாலும் அப்படியொரு பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. எமது கட்சி ஒருபோதும் உத்தியோகபூர்வமாக அவர் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்று அறிவித்ததில்லை.


அவரை நாங்கள் கட்சியின் ஸ்தாபகர் என்றே அறிமுகப்படுத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளார். twin

No comments

Powered by Blogger.