Header Ads



தந்தையின் சடலத்தின் மீது, வளரும் தென்னம் பிள்ளை - மகன் வாக்குமூலம்


சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் தனதுதாய், தகாத உறவு வைத்திருந்த  நபருடன் இணைந்து தனது தந்தையை கொன்றுள்ளார் என அவரது மகன் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


சடலத்தை தோட்டத்தில் உள்ள மலசலகூட குழிக்குள் மறைத்து வைத்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொலமுல்ல அன்னாசி தோட்டம் பகுதியில் வசித்து வந்த கபுகே ஜினதாஸவே இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகனான சுனில் கபுகே என்பவரே ​முறைப்பாடு செய்துள்ளார்.


தந்தையை ​கொன்ற இவ்விருவரும் அவரின் உடலை மலசலகூட குழிக்குள் மறைத்து வைத்துவிட்டு, அதன்மீது தென்னம்பிள்ளையை நட்டனர். அது தென்னமரமாக வளர்ந்துவிட்டது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.