Header Ads



இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம்.


இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள், சவூதி அரசாங்கத்தினால் இமாம்களுக்கு இருக்கவேண்டிய நாங்கு அடிப்படை தகைமைகளைக்கொண்டு  தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்கள் சவுதியை சேர்ந்த 30 வயதை பூர்த்தி செய்தவர்களாகவும் சவூதி பல்கலைக்கழகமொன்றின் MA பட்டதாரியாகவும் அல்குரானை மனனம் செய்து அதனை அழகாக ஓதக்கூடியவராகவும் இருக்கவேண்டும். 


ஹரமில் இமாமாக இருக்கின்ற,இருந்த 10 பேர்கள் பற்றிய குறிப்புத்தான் இப்பதிவு.


சேய்க் அப்துர்ரஹ்மான் அல் சுதைஸ் (Abdul-Rahman Al-Sudais - 1960) அவர்கள் ஹரமின் தலைமை இமாமாகவும் தொழுகை நடாத்துபவராகவும் பணிபுரிகிறார்.செய்க் சுதைஸ் அவர்கள் இமாம் முஹம்மத் பின் சவுத் ‘க்ஷரிஆ’ பல்கலைக்கழகத்தின் PhD  பட்டதாரி.


சேய்க் பண்டார் பின் அப்துல் அஸீஸ் பலீழா (Sheikh Bandar bin Abdul Aziz Baleelah –1975) உம்மும் குரா  பல்கலைக்கழகத்தில் (Umm Al Qurra University) MA பட்டம்பெற்று மதினா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (Islamic University of Madinah) PhD பட்டம் பெற்றவர். தற்போது தாயிப் பல்கலைக்கழகத்தில் ‘க்ஷரிஆ’ துறை பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.


செய்க் யாசிர் அல் தோசரி (Sheikh Yasir Al Dossary –1980)  ‘க்ஷரிஆ’ துறையில் PhD பட்டதாரி.


செய்க் அப்துல்லாஹ் பின் அவாத் அல் ஜுஹானி (Sheikh Abdullah bin Awad Al juhani - 1976), உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் PhD பட்டதாரி.


செய்க் மெஹர் பின் ஹமாத் (Sheikh Meher Bin Hamad -1969), உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் PhD பட்டதாரி.


செய்க் உசாமா கய்யத் (Sheikh Usamah Khayyat -1956) உம்முல் குரா பலகலைக்கழகத்தில் PhD பட்டதாரி.


செய்க் சாலிஹ் அல் ஹுமைத் (Sheikh Saleh Al Humaid -1950) உம்முல் குரா பலகலைக்கழகத்தில் PhD பட்டதாரி.


செய்க் சாலிஹ் அல் தாபித் (Sheikh Saleh Al Talib -1974 CE) இஸ்லாமிய நீதித்துறையில் MA பட்டதாரி.மக்காவிலுள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணிபுரிந்தார். 2018 ஆகஸ்ட் மாதம், பொது இடங்களில் பால்வேறுபாடுகளை பேணாது ஒன்று கூட அனுமதித்த அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 2022 ஆகஸ்ட் இல் அவரது மேன்முறையீடு மறுக்கப்பட்டு 10 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)


செய்க் காலித் அல் கம்தி (Sheikh Khalid Al Ghamdi -1988 ) உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் MA பட்டம் பெற்றவர். ஓய்வு பெற்றவர்.


செய்க் பைசல் அல் கஸ்ஸாவி (Sheikh Faizal Al Gazzawwi -1965) உம்முல் குரா பல்கலைகழகத்தில் PhD பட்டதாரி.


செய்க் சவ்த் அல் சுரைம் (Saud ibn Ibrahim ibn Muhammad Al-Shuraim - AD1966) அநாதை இல்லத்தில் வளர்ந்தவர், உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் PhD பட்டம் பெற்றவர்,2023 முதல் ஓய்வு பெருபவர்.


AKBAR RAFEEK

No comments

Powered by Blogger.