பெண்ணை கடத்திச்சென்ற காடையர்கள் - பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சி
- செ.கீதாஞ்சன் -
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப் பெண் ஒருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று -15- பதிவாகி உள்ளது.
முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்வேளை சப்பாத்து அணிந்த முகம்கள் இறுக்க கட்டப்பட்ட இரண்டு நபர்கள் குறித்த பெண்ணினை காட்டிற்குள் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோக முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இருவரின் பிடியில் இருந்து பெண் தப்பித்து வீதிக்கு வந்து அங்கு பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பெண்ணினை கடத்திய இருவரும் தப்பி சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து மருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
Post a Comment