Header Ads



அரசியல்வாதியின் வாகனம் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு


கண்டியில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் தந்தை மற்றும் மகனொருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பூவெலிக்கடை - சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (வயது 41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (வயது 10) என்ற அவரது மகனுமே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


தேவையொன்றுக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் வீதியைக் கடக்கும் போது இவ்விபத்து நேர்ந்துள்ளது என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


இந்த விபத்து தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.