Header Ads



கோழி பிடிக்க வந்த திருடியுடன், மல்லுக்கட்டிய இல்லத்தரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி



பொகவந்தலாவை ஆரியபுர காலனி வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளை திருட பெண் வேடமிட்டு வந்த நபர் பிடிபட்டுள்ளார்.


குறித்த வீட்டில் வசிக்கும் இல்லத்தரசி சண்டையிட்டு அந்த நபர் கொண்டு வந்த இரண்டு கத்திகளையும் கைப்பற்றியுள்ளார்.


நேற்றைய தினம்  (30.04.2023) அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிலுள்ள நாய் குரைத்த நிலையில், வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார்.


அங்கு புர்கா அணிந்து வந்த நபருடன் இந்த பெண் மல்லுக்கட்டிய போது புர்கா கீழே விழுந்துள்ளது.


புர்காவை கழற்றிய பின், அதனை அணிந்து வந்த ஆண் எனவும் அந்த நபரிடம் இருந்து இரண்டு கத்திகள் உள்ளதனையும் அறிந்த பெண், 2 கத்திகளை பறித்துச் சென்றுள்ளார்.


திருடனுடன் சண்டையிட்ட பெண்ணின் கணவர், தனது வீட்டில் கோழிகளை திருடியவர் தப்பி ஓடிவிட்டதாகவும், திருடனைப் பிடிக்குமாறு பொகவந்தலாவை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் திருடன் ஓடுவதும், பெண் திருடனுடன் போராடுவதும் பதிவாகியுள்ளது. Twin

No comments

Powered by Blogger.