பொருட்கள் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம்
ருவன்வெல்ல பகுதியில் இன்றைய தினம் (19.05.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், டொலரின் பெறுமதி குறைவடையும் போது பொருட்களின் விலைகளும் நியாயமான முறையில் விதிக்கப்பட வேண்டும்.
சந்தையில் 75 வீதமான பொருட்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வர்த்தக மற்றும் கொள்கை அமுலாக்கல் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து தற்போதைய நாட்களில், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய, சந்தையில் அத்தியாவசிய பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதா என்பது ஆராயப்படுகிறது.
அவ்வாறு விலை குறைவடையாவிட்டால், அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment