Header Ads



குழந்தை கடத்தல் தொடர்பில் கைதானவர் பற்றிய உண்மையான விபரம்


யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.


குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இன்றைய தினம் காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.


மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்  குறித்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.