இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமிய தனிநபர் வீட்டுத் தொகுதிகளாக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகேவுடன் இடம்பெற்றதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய செயலாளர்களுடனும் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாகவும், தூதரகங்கள் ஊடாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், கட்டப்படும் வீடுகளின் வகைகள், வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வீடுகள் கட்டப்படும் பகுதிகள் கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment