பொய் சொன்னாரா நீதி அமைச்சர்..?
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு தொடர்பில் இலங்கைக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை தவிர்ப்பதற்காக, இலங்கைக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும், இதில் ஒரு கட்டமாக இலங்கையர் ஒருவரின் பெயரில் 250 மில்லியன் டொலர்கள் வைப்பிலிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
குறித்த பெயரும் அவரின் கணக்கு இலக்கமும் போலியானவை என்று தெரியவந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இந்த இலஞ்சம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வங்கி கணக்கு மற்றும் வைப்பிலிடப்பட்ட பணம் என்பன தொடர்பில், நீதியில் ஆர்வமுள்ள தரப்பினர் விசாரணை மற்றும் ஆய்வு செய்துள்ளனர்.
எனினும் கணக்கு வைத்திருப்பவர் என்று அழைக்கப்படுபவர் மற்றும் பணம் என்பன ஒரு போலியான திசைதிருப்பலாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் வங்கியொன்றில் கணக்கு வைத்திருக்கும் 'சாமர குணசேகர' என்பவருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக ஏப்ரல் 25ஆம் திகதி அமைச்சர் ராஜக்ச கூறியிருந்தார்.
எனினும் இந்த தகவலுக்கான பொறுப்பை அவர் ஏற்கவில்லை.bஇந்தநிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment