Header Ads



மாணவனின் சடலம் மீட்பு

வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது


வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே, அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.


இவர் வீரசேகரகம பிரதேசத்தில் வசிப்பவராகும். எனினும் குறித்த மாணவன் தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.


இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.