Header Ads



டெலிகொம் பங்குகளை விற்பதற்கு தடைபோட்ட நீதிமன்றம்


எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்க பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியமைக்கு எதிராக 2 தொலைத்தொடர்பு தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்த மனு ஒன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நிதி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்தப் பங்குகளை மாற்றும் செயல்முறை முற்றிலும் சட்டபூர்வமானது என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.