பசில் நாடு திரும்பமாட்டாரா..?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றுள்ளனர்.
அங்கிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் செல்கின்றனர்.
பசில் ராஜபக்ஷவின் திடீர் அமெரிக்க விஜயத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அண்மையில் பொதுஜன பெரமுனவின் மே பேரணியின் பின்னர், கட்சியின் தலைவர் மற்றும் வருங்கால வேட்பாளராக கட்சியின் சில பிரதிநிதிகள் அவரைக் குறிப்பிட்டபோது கட்சிக்குள் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இந்நிலையில் இரண்டு வார காலத்திற்கு பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளதாகவும், ஆனால் தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர் இலங்கைக்கு திரும்ப மாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. TL
Post a Comment