இலங்கைச் சிறுவனின் அபார சாதனை
உலக நாடுகளில் 195 நாடுகளின் தலைநகரங்களை 4 நிமிடங்களில் சிறுவன் ஒருவன் உலக படத்தில் தொட்டு காண்பித்துள்ளான்.
2018 மே 20 ஆம் திகதி பிறந்த இந்த புத்திசாலித்தனமான சிறுவனுக்கு நான்கு வயதாகிறது.
நுவரெலியா லவர்ஸ்லீப் விநாயகபுரம் பிரதேசத்திலுள்ள தோட்டத்தில் வசிக்கும் குமாரவேல் காலாநேஷன் மற்றும் செல்வராஜ் லலிதாம்பிகையின் மகனான காலாநேஷன் என்ற சிறுவனே இவ்வாறு உலக படத்தில் தொட்டு காண்பிக்கின்றான்.
உலக படத்தில் நாடுகளை தொட்டு காண்பிக்கும் பயிற்சியை இந்த சிறுவனுக்கு இரண்டு வயதில் இருந்தே அவனுடைய பெற்றோர் அளித்துள்ளனர்.
ஆசியாவில் சாதனை படைக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகின்றது. அதன்பின்னர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்று அச்சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
(ரஞ்சித் ராஜபக்ஷ)
Post a Comment