Header Ads



ஜீப் மோதி, மாணவி உயிரிழப்பு


குருநாகல் - உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வாகன விபத்தில் சிக்கி இன்று (20.05.2023) உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்தில் டி.எஸ். சேனநாயக்கா பாடசாலையில் 11ம் ஆண்டில் கல்வி பயிலும் அமோத்யா சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ரத்மலே உயன, உஹுமிய பிதுருவெல்லவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார்.


மாணவி தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகல் செல்வதற்காக பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.


வீதியில் பயணித்த ஜீப் வண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மாணவி மீது மோதி தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சாரதியின் நித்திரை கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பிலியந்தலை கோனாமடித்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.